Home உலகம் கிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா! பாகிஸ்தானுடன் ஆட்டம் தொடர்கிறது!

கிரிக்கெட் : 336 ஓட்டங்கள் எடுத்தது இந்தியா! பாகிஸ்தானுடன் ஆட்டம் தொடர்கிறது!

1717
0
SHARE
Ad

மான்செஸ்டர் (இங்கிலாந்து) – (மலேசிய நேரம் இரவு 11.10 நிலவரம்) மிகுந்த எதிர்பார்ப்புடன் இன்று தொடங்கிய இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையின் இடையூறு இல்லாமல் நிர்ணயித்தபடி தொடங்கியது.

நாணயத்தைச் சுண்டிப்போட்டதில் வெற்றி பெற்ற பாகிஸ்தான், பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, 50 ஓவர்களையும் நிறைவு செய்து 5 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, 336 ஓட்டங்கள் எடுத்தது.

இடையில் மழையினால் சிறிது நேரம் ஆட்டம் தடைப்பட்டாலும், இந்தியா தொடர்ந்து ஆடி 50 ஓவர்களையும் நிறைவு செய்தது.

#TamilSchoolmychoice

மீண்டும் மழை பெய்த காரணத்தால் ஆட்டம் தொடருமா என்ற ஏமாற்றம் இரசிகர்களிடையே நிலவியது.

எனினும், கொஞ்ச நேரத்தில் மழை நின்றுவிட்டதால், ஆட்டம் தொடர்ந்தது.

தற்போது இரண்டாவது பாதி ஆட்டத்தில் இந்தியா பந்து வீச, பாகிஸ்தான் இதுவரையில் 1 விக்கெட்டை இழந்து 25 ஓட்டங்கள் எடுத்திருக்கிறது.

337 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் தொடர்ந்து விளையாடி ஓட்டங்கள் எடுத்து வருகிறது.