Home நாடு மலாயா கணபதி-வீரசேனனுக்கு நினைவேந்தல் விழா – வேதமூர்த்தி சிறப்பு வருகை

மலாயா கணபதி-வீரசேனனுக்கு நினைவேந்தல் விழா – வேதமூர்த்தி சிறப்பு வருகை

1053
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை நீத்த தலைவர்களான மலாயா கணபதி, வீரசேனன் ஆகியோருக்காக எழுபதாம் ஆண்டு நினைவேந்தல் விழா ஹிண்ட்ராஃப் சார்பில் கோலாலம்பூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜூன் மாதம் 23-ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணி அளவில் பிரிக்பீல்ட்ஸ், துன் சம்பந்தன் சாலை 3, தேசிய வங்கி ஊழியர் சங்கக் கட்டடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியில் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி சிறப்பு வருகையாளராகக் கலந்து கொள்கிறார்.

டத்தோ டோமினிக், டாக்டர் வீ.செல்வரத்தினம், டாக்டர் சைட் உசேன் அலி, மலேசிய சோசலிசக் கட்சியைச் சேர்ந்த அருட்செல்வன், சமூகவாதியும் இலக்கியவாதியுமான ஜானகிராமன் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கருத்துரை ஆற்ற உள்ளனர்.

#TamilSchoolmychoice

சிற்றுண்டியுடன் தொடங்கும் இந்த நிகழ்ச்சி தொடர்பான மேல் விவரம் அறிய ஹிண்ட்ராப் சிலாங்கூர் மாநிலத் தலைவர் சி.மணிமாறனுடன்(012-2658144) தொடர்பு கொள்ளலாம்.