Home உலகம் ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழியை, கலீல் ஜிப்ரான் கூறியதாக பதிவிட்டு கேலிக்கு இலக்கான இம்ரான் கான்!

ரவீந்திரநாத் தாகூர் பொன்மொழியை, கலீல் ஜிப்ரான் கூறியதாக பதிவிட்டு கேலிக்கு இலக்கான இம்ரான் கான்!

795
0
SHARE
Ad

இஸ்லாமாபாட்: வாழ்க்கை என்பது முழுவதும் மகிழ்ச்சிகளால் நிரம்பியது என்று கனவு கண்டேன். ஆனால் கண் விழித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பது சேவை எனப் புரிந்தது. சேவை செய்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாயிற்றுஎன்ற பொன்மொழியை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஒரு சிலர் அதற்கு வாழ்த்துகளை கூறி வந்த நிலையில், ஒரு சிலர் அவரது அந்த பதிவை ஒட்டி கிண்டல் செய்து வருகின்றனர்.

அவ்வாறு பதிவிட்டிருந்த இம்ரான், அப்பொன் மொழிகளைக் கூறியது கலீல் ஜிப்ரான் எனக் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அப்பொன்மொழிகளை கூறியது ரவீந்திரநாத் தாகூர்.

#TamilSchoolmychoice

இதனால், மக்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் இம்ரான் உள்ளாகி இருக்கிறார். இந்த கேலி கிண்டலுக்கு பலியாக இருக்கும் அவரது ஊடக பிரிவையும் ஒரு சிலர் நகைத்து வருகின்றனர்.