Home நாடு பெர்சாத்து கட்சி தேர்தல் தள்ளிப் போகாது!- பிரதமர்

பெர்சாத்து கட்சி தேர்தல் தள்ளிப் போகாது!- பிரதமர்

759
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பெர்சாத்து கட்சித் தேர்தல் தள்ளி வைக்கப்படாது என்று பெர்சாத்து கட்சித் தலைவரும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தனது முதல் கட்சி தலைமைத் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசித்து வருவதாக பெர்சாத்து கட்சி குறிப்பிட்டிருந்தது.

கடந்த செப்டம்பர் 2016-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இக்கட்சி, ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கு ஒரு முறை அதன் தலைமையை தேர்வு செய்ய வேண்டியுள்ளது.

#TamilSchoolmychoice

கட்சித் தேர்தலை பெர்சாத்து ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை ஒத்திவைக்கும் என்று மலேசிய இன்சைட் (டிஎம்ஐ) குறிப்பிட்டுள்ளதாக மலேசியாகினி பதிவிட்டிருந்தது.

கட்சி இரத்து செய்யப்படும் அபாயத்தைத் தடுப்பதற்காகவே இது செய்யப்படுவதாக கட்சி வட்டாரம் தெரிவித்ததாக மலேசியா இன்சைட் குறிப்பிட்டுள்ளது. மேலும், 1966-ஆம் ஆண்டும் சங்கச் சட்டத்தின் அனைத்து பிரிவுகளின் விதிகளை பூர்த்தி செய்வதை கட்சி உறுதி செய்யும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

இதற்கிடையே, கட்சித் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து இன்னும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என்று பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் மார்சுகி யாஹ்யா கூறியிருந்தார்.