புது டில்லி: பஞ்சாப் தேசிய வங்கியில் 13 ஆயிரம் கோடி ரூபாய் வரையில் கடனைப் பெற்று இலண்டனுக்கு தப்பிச் சென்ற வைர வியாபாரியான நீரவ் மோடியின் சுவிஸ் வங்கிக் கணக்கிலுள்ள 6 மில்லியன் டாலர் மதிப்புள்ள பணம் மற்றும் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் வரைக்கும் அவர் கடனை அடைக்கவில்லை. இதில் நிரவ் மோடியின் சகோதரி பூர்வியும் சம்பந்தப்பட்டுள்ளார் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில் நீரவ் மோடி கடனை அடைக்காமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இந்திய அரசு எடுத்த முயற்சியால் இவரை இலண்டன் காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவருக்கு ஜாமின் வழங்க வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றமும் மறுத்துவிட்டது. தற்போது சிறையில் இருக்கும் இவர் மற்றும் இவரது சகோதரி பூர்வி மோடியின் நான்கு சுவிஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.