தமிழக உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய தலைவராகவும், சிறந்த ஆளுமையும் தலைமைத்துவமும் கொண்ட தலைவராகவும் ஸ்டாலின் விளங்குவதால் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டதாக தங்கத் தமிழ்ச் செல்வன் அறிவித்தார்.
இன்று தமிழ்ச் செல்வன் திமுகவில் இணைவார் என்ற ஆரூடங்கள் நேற்று முதலே ஊடகங்களில் உலவி வந்தன.
தேனி மாவட்டத்தில் பொதுவாக வலுவிழந்து காணப்படும் திமுகவுக்கு, தமிழ்ச் செல்வனின் வருகை மேலும் உற்சாகத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், தமிழ்ச் செல்வனின் வருகையால் திமுகவில் சில தரப்புகளின் எதிர்ப்பும் தொடர்ந்து இருந்து வரும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது.