Home நாடு நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள நஜிப்புக்கு அனுமதி மறுப்பு!

நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ள நஜிப்புக்கு அனுமதி மறுப்பு!

1059
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் சொத்துக்களை அறிவிக்கக் கோரும் மசோதா தொடர்பாக நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்வதற்காக விசாரணையை ஒத்திவைப்பதில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தோல்வியடைந்தார்.

நஜிப்பின் முதன்மை வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா அளித்த விண்ணப்பத்தை நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி தள்ளுபடி செய்தார். இந்த மசோதா மிகவும் முகியமானதாக இருப்பதால் தமது கட்சிக்காரர் நாடாளுமன்றத்தில் இருப்பது முக்கியம் என்று நீதிமன்றத்தில் ஷாபி தெரிவித்தார்.

கார்பல் சிங் மற்றும் அன்வர் இப்ராகிம் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்ற வழக்குகளில் ஒத்திவைக்கப்பட்டதற்கான பல எடுத்துக்காட்டுகளையும் ஷாபி குறிப்பிட்டுக் காட்டினார்.

#TamilSchoolmychoice

ஆயினும், அவரது அந்த விண்ணப்பத்தை தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் மறுத்தார். அவர் நஜிப்பின் கோரிக்கையை அற்பமான விண்ணப்பம் என்று விவரித்தார்.

இரு தரப்பினரிடமிருந்தும் வாதங்களைக் கேட்டபின், விண்ணப்பத்தைநீதிபதி நஸ்லான் நிராகரித்தார்.