Home கலை உலகம் ராஜேஷ் வைத்யா ஆசிய அளவில் சாதனை!

ராஜேஷ் வைத்யா ஆசிய அளவில் சாதனை!

1646
0
SHARE
Ad

சென்னை: பிரபல வீணை வாசிப்பாளர் ராஜேஷ் வைத்யா தனது குழுவினருடன் 60 நிமிடங்களில் 60 பாடல் துணுக்குகளை வாசித்து, ஆசிய அளவில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

பிரபல இசை அமைப்பாளர் ஜி.ராமநாதன் தம்பி மகனான இவர், வீணை வாசிப்பில் மேஸ்ட்ரோ பட்டம் பெற்றவர். இவர் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

தனியார் விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. இதில் ஆசிய நாடுகளான இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், வியட்நாம் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், இண்டோசீனா புக் ஆப் ரெக்கார்ட்ஸ், லாவோஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் நேபால் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் ஆகிய தேசிய சாதனையாளர்கள், தங்களை ஒப்பிட்டு, போட்டியிட்டு, ஆசிய சாதனையாளர் தகுதிக்கு தங்களை உயர்த்தி கொள்வதற்கு இது அடித்தளமாக அமைந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

ராஜேஷ் வைத்யாவின் இந்த சாதனைக்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்