Home நாடு 1990-களில் அன்வார், மகாதீர் சம்பந்தப்பட்ட அந்நிய செலாவணி குறித்து விசாரிக்க வேண்டும்!- ரசாலி ஹம்சா

1990-களில் அன்வார், மகாதீர் சம்பந்தப்பட்ட அந்நிய செலாவணி குறித்து விசாரிக்க வேண்டும்!- ரசாலி ஹம்சா

710
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 1990-களில் மத்திய வங்கி சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நாணய பரிவர்த்தனைகள் (அந்நிய செலாவணி) தொடர்பான அரசு விசாரணை ஆணையம் (ஆர்சிஐ) பரிந்துரைகளை அமல்படுத்துமாறு அம்னோ மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

இது ஒரு தீவிரமான விசயம். ஏனெனில், அந்நிய செலாவணி வணிகம் காரணமாக 30 பில்லியன் ரிங்கிட் இழப்பை அப்போதைய அரசாங்கத்தால் ஏற்கப்பட்டது” என்று முன்னாள் நிதியமைச்சருமான அவர் கூறினார்.

ஆர்சிஐ முன்மொழியப்பட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு செயல்படுத்த வேண்டும். அவை நியாயமானதா இல்லையா என்று ஆராயப்பட வேண்டும்? இல்லையெனில், ஏன் ஆர்சிஐ இருக்க வேண்டும்?” என்று அவர் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை இல்லை என்று அரசாங்கம் வகைப்படுத்தியது குறித்து அவரிடம் வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், பிரதமர் துறை அமைச்சர் லீயூ வுய் கியோங் இந்த குற்றச்சாட்டை நிரூபிக்க ஆவண ஆதாரங்கள் இல்லை என்று கூறினார்.

ஆர்சிஐசெயலாளர்யூசோப்இஸ்மாயில்கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி தாக்கல்செய்தகாவல் துறை புகாரை திரும்பப் பெற்றதையும் அவர் கூறினார்.

2017-ஆம் ஆண்டு நவம்பர் 30-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 528 பக்கங்கள் குறித்த அறிக்கையில், அந்நேரத்தில் நிதியமைச்சராக இருந்த அன்வார் இப்ராகிம் அமைச்சரவையை குழப்பியதாக ஆர்சிஐ கூறியது. அந்நேரத்தில் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமட், நிதியமைச்சர் வெளியிட்ட தவறான அறிக்கைக்கு சம்மதம் அளித்ததாக கூறப்பட்டது.