Home உலகம் ஹாங்காங் நாடாளுமன்றத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்!

ஹாங்காங் நாடாளுமன்றத்தில் போராட்டக்காரர்கள் அத்துமீறி நுழைந்தனர்!

602
0
SHARE
Ad

ஹாங்காங்: நேற்றிரவு திங்கட்கிழமை ஹாங்காங் நாடாளுமன்றத்திற்குள் போராட்டக்காரர்கள் நுழைந்து சூறையாடி உள்ளனர்.

இந்த நாகரிகமற்றச் செயலை தீவிர வன்முறை செயல் என ஹாங்காங் தலைவர் கேரி லேம் கண்டித்துள்ளார்.

ஹாங்காங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவரை தைவான் மற்றும் சீனாவிடம் ஒப்படைக்கும் நடவடிக்கை தொடர்பான மசோதாவை அரசு கைவிட வேண்டுமென்று வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் முதல் மக்கள் போராடி வருகிறார்கள்.

#TamilSchoolmychoice

காவல் துறையினர் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி நாடாளுமன்றத்தை ஆக்கிரமித்து இருந்தோரை வெளியேற்றினர்.

அண்மையில், இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக கேரி லேம் கூறியும், மக்கள் அவரை பதவியை விட்டு விலகுமாறும், அந்த மசோதாவை எக்காலத்திலும் நிறைவேற்றக்கூடாது என்று கூறி வருகின்றனர்.