Home உலகம் கோப்பா அமெரிக்கா : 3-0 கோல்களில் பெரு சிலியைத் தோற்கடித்தது

கோப்பா அமெரிக்கா : 3-0 கோல்களில் பெரு சிலியைத் தோற்கடித்தது

958
0
SHARE
Ad

போர்ட்டோ அலெக்ரி (பிரேசில்) – (மலேசிய நேரம் காலை மணி 10.30) பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் தென் அமெரிக்க நாடுகள் பங்கு பெறும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான அரையிறுதிச் சுற்று போட்டிகளில் இன்று வியாழக்கிழமை மலேசிய நேரப்படி காலை 8.30 மணியளவில் பிரேசிலின் போர்ட்டோ அலெக்ரி நகரில் (Porto Alegre, Brazil) தொடங்கிய பரபரப்பான இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பெருவும் சிலியும் விளையாடின.

இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் பெரு 2 கோல்கள் அடித்து முன்னணி வகித்த பெரு இரண்டாவது பாதி ஆட்டத்தில், 91-வது நிமிடத்தில் மற்றொரு கோலைப் புகுத்தி 3.0 கோல் எண்ணிக்கையில் சிலியைத் தோற்கடித்தது.

முதல் கோலை பெருவின் எடிசன் புளோரஸ் 21-வது நிமிடத்தில் புகுத்த இரண்டாவது கோலை 38-வது நிமிடத்தில் யோஷிமார் யோதுன் புகுத்தினார். மூன்றாவது கோலை பாவ்லோ குயெர்ரோ 91-வது நிமிடத்தில் அடித்தார். 90 நிமிட ஆட்டத்தில் கூடுதலாக வழங்கப்பட்ட சில நிமிடங்களில் இந்த இறுதி கோல் அடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நேற்றைய முதல் அரையிறுதி ஆட்டத்தில் காற்பந்து விளையாட்டின் உலகின் மிகச் சிறந்த குழுக்களைக் கொண்டிருக்கும் நாடுகளாகவும், பரம வைரிகளாகவும் பார்க்கப்படும் பிரேசில்-அர்ஜெண்டினா இடையிலான ஆட்டத்தில் பிரேசில் 2.0 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று இறுதி ஆட்டத்தில் நுழைந்து விட்டது.

இன்றைய ஆட்டத்தில் பெரு பெற்ற வெற்றியைத் தொடர்ந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் கோப்பா அமெரிக்கா கிண்ணத்திற்கான இறுதி ஆட்டத்தில் பிரேசில்-பெரு நாடுகள் மோதுகின்றன.