Home இந்தியா நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரும் 2 சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு

நீட் தேர்விலிருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரும் 2 சட்ட மசோதாக்கள் நிராகரிப்பு

954
0
SHARE
Ad

சென்னை – தமிழகத்தின் மாணவர்களுக்கு விலக்களிக்கக் கோரி தமிழக அரசு நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்களை மத்திய அரசாங்கம் நிராகரித்துவிட்டது என சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இன்று சனிக்கிழமை மாலை இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிராகரிப்புக்கான காரணங்கள் என்ன? எப்போது இந்த மசோதாக்கள் சமர்ப்பிக்கப்பட்டன, எப்போது நிராகரிக்கப்பட்டன என்பது போன்ற விவரங்களை தெரிவிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சுமார் 2 ஆண்டுகளுக்கும் முன்னர் இந்த மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

நீட் தேர்வில் தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க தொடர்ந்து நெருக்குதல் அளித்து வருகிறோம், போராடுகிறோம் என தமிழகத்தின் அதிமுக அரசு தொடர்ந்து கூறிவரும் நிலையில் இந்தத் தகவல் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த முடிவு காரணமாக, இனி தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கப்பட வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.

அதே வேளையில் மத்திய அரசு தமிழக அரசின் இரண்டு மசோதாக்களை நிராகரித்தது குறித்து தமிழக அரசு ஏன் இன்னும் மக்களுக்கு அறிவிக்கவில்லை என்ற நெருக்கடியும் தமிழகத்தை ஆளும் அதிமுக அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது.