Home நாடு திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி பணத்தை தேமு திருடவில்லை!

திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி பணத்தை தேமு திருடவில்லை!

712
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முந்தைய தேசிய முன்னணி நிருவாகம் திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி நிதியை கொள்ளையடித்து விட்டது என்ற நிதியமைச்சரின் கூற்றை தேசிய பொது கணக்குக் குழு (பிஏசி) மறுத்துள்ளது.

தேசிய முன்னணி நிருவாகம் ஜிஎஸ்டியிலிருந்து பெற வேண்டிய வருவாயை மிகைப்படுத்தி மதிப்பிட்டுள்ளதை பிஏசி கண்டுபிடித்துள்ளதை மலேசியாகினியிடம் சம்பந்தப்பட்ட வட்டாரம் தெரிவித்துள்ளதாக பதிவிட்டுள்ளது. அதே நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறத் தேவையான தொகையை குறைத்தும் அது மதிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், முன்னாள் அரசாங்கம் பணத்தைத் திருப்பிச் செலுத்துவதற்காக ஒருங்கிணைந்த கணக்கிலிருந்து திருடவில்லை என்று அது தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த விவகாரம் குறித்த பிஏசியின் அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

19.4 பில்லியன் ரிங்கிட் திருப்பிச் செலுத்த இருந்த ஜிஎஸ்டி நிதியை தேசிய முன்னணி நிருவாகம் தவறாக பயன்படுத்திவிட்டதாக லிம் குவான் எங் கடந்த 2018-ஆண்டு செப்டம்பர் மாதம் குற்றம் சாட்டியிருந்தார்.