Home இந்தியா ராகுல், சோனியா நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

ராகுல், சோனியா நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம்!

875
0
SHARE
Ad

புது டில்லி: கர்நாடாக, கோவா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகியும், பாஜக கட்சிக்கு தாவியும் வரும் நிலையில், ராகுல் மற்றும் சோனியா காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினர்.  

கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் 14 பேர் பதவி விலகுவதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். மேலும் நேற்று புதன்கிழமை கூடுதலாக இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல் கடிதத்தை அளித்துள்ளனர்

இதே போன்று கோவா மாநிலத்தில், 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரே நாளில் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

#TamilSchoolmychoice

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் இது போன்று நடந்து கொள்வதற்கு பாஜகதான் காரணம் என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி உள்பட கட்சியின் மூத்த உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.