வாஷிங்டன்: அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் சர் கிம் டாரக் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை கடுமையாக விமர்சித்ததாக வெளியான மின்னஞ்சல்களைத் தொடர்ந்து அவர் பதவி விலகினார்.
“அமெரிக்கா அதிபரின் ஆட்சி குழப்பம் மிக்கதாகவும் திறமையற்றதாகவும் இருக்கிறது என்று அவர் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார். அதற்கு பதில் கூறிய டிரம்ப் அவரை ’அறிவில்லாதவர்’ எனத் தெரிவித்திருந்தார்.
கிம்மின் பதவி விலகல் வருத்தம் அளிப்பதாக பிரிட்டன் பிரதமர் தெரீசா மே கூறியுள்ளார்.
”என்னுடைய பதவிக்காலம் இவ்வருட இறுதி வரை இருந்தாலும் இப்போது இருக்கும் தருணத்தில் புதிய தூதரை நியமிக்க அனுமதிப்பதே சிறந்தது என நான் நம்புகிறேன்” என்று வெளியுறவு அலுவலகத்திற்கு கிம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.