Home நாடு 925.1 மில்லியன் 1எம்டிபி நிதியை அரசாங்கம் மீட்டுள்ளது!- குவான் எங்

925.1 மில்லியன் 1எம்டிபி நிதியை அரசாங்கம் மீட்டுள்ளது!- குவான் எங்

1008
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வரையிலும் மொத்தமாக 925.1 மில்லியன் ரிங்கிட் 1எம்டிபி நிதியை அரசாங்கம் மீட்டுள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

இந்த நிதியின் பெரும்பகுதி நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள பார்க் லேன் தங்கும் விடுதியை விற்றதிலிருந்து (567.8 மில்லியன் ரிங்கிட்) கிடைக்கப்பெற்றதாகவும், மற்றும் ரெட் கிரானைட் பிக்சர்ஸ் (238 மில்லியன் ரிங்கிட்) திரைப்படதயாரிப்பாளரிடமிருந்துபெறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மீதமுள்ள 97.3 மில்லியன் ரிங்கிட்டை சிங்கப்பூர் அரசாங்கம் திருப்பி அளித்தது என்று லிம் கூறினார்.

#TamilSchoolmychoice

27 மில்லியன் ரிங்கிட் மலேசிய நிறுவனங்களிலிருந்து பெறப்பட்டவையாகும். அவற்றில் 1எம்டிபி மூலமாக 20.9 மில்லியன் ரிங்கிட்டும் 6.1 மில்லியன் ரிங்கிட் 1எம்டிபி அறவாரியத்திடமிருந்தும் பெறப்பட்டது என்று அவர் கூறினார்.

எம்ஏசிசி, காவல்துறை, தலைமை வழக்கறிஞர் அலுவலகம் உள்ளிட்ட உள்ளூர் அமலாக்க அமைப்புகள் 1எம்டிபி பணத்தை மீட்பதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுடன் தொடர்ந்து பணியாற்றுகின்றன. எனவே, 51 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி கடனை அடைப்பற்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிப்பதாக லிம் குறிப்பிட்டிருந்தார்.