Home நாடு சிறைத் தண்டனையை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வான் ஜிக்கு சாதகமான முடிவு!

சிறைத் தண்டனையை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வான் ஜிக்கு சாதகமான முடிவு!

751
0
SHARE
Ad
படம்: நன்றி கொஸ்மோ

கோலாலம்பூர்: இஸ்லாமிய மத போதகரான வான் ஜி வான் ஹுசின், தேச நிந்தனைக் குற்றத்திற்காக சிறைவாசம் அனுபவிப்பதை தள்ளிப்போடும் விண்ணப்பத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

வழக்கறிஞர் ராட்ஸ்லான் ஜலாலுடின் சமர்ப்பித்த விண்ணப்பத்தைப் பெற்ற ஷா அலாம் உயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் ஹாலீம் அமான் இந்த முடிவை எடுத்தார்.

முன்னதாக கடந்த ஜூலை 9-ஆம் தேதியன்று, மன்னர்களின் உரிமைக்கு எதிராக மக்களை தூண்டும் விதமாக வான் ஜி பேசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

#TamilSchoolmychoice

முன்னதாக ஒன்பது மாதங்களுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, அப்துல் ஹாலீம் ஒரு வருடமாக மாற்றினார்.

தீர்ப்பைப் படித்த பிறகு, அப்துல் ஹாலீம் 37 வயதான வானுக்கு அன்றைய தேதியிலிருந்து தொடங்கி சிறைத் தண்டனையை அனுபவிக்க உத்தரவிட்டார்.

வான் ஜி மீது 1948-ஆம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டம் பிரிவு 4 (1) (சி) கீழ் குற்றம் சாட்டப்பட்டது

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 5,000 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்படலாம்.