Home நாடு வான் ஜி சிறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

வான் ஜி சிறையில் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய மத போதகர், வான் ஜி வான் ஹுசின், காஜாங் சிறையில் அடைக்கப்பட்டிருந்தபோது சிறை பாதுகாவலரால் தாக்கப்பட்டதாகக் கூறினார்.

ஒரு நாள் சிறைவாசத்திற்குப் பிறகு கடந்த ஜூலை 12-ஆம் தேதி விடுவிக்கப்பட்ட வான் ஜி, தனது அனுபவத்தைக் கூறினார். வான்ஜி, தம்மை அறிமுகப்படுத்திய பின்னர் மூன்று முறை குத்தப்பட்டதாகக் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து தாம் பிகேஆர் கட்சியின் பெர்மாத்தாங் பாவு நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசாவிடம் தெரிவித்ததாகவும், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிற்கு இந்த சம்பவம் குறித்து தெரியும் எனவும் கூறினார்.

#TamilSchoolmychoice

அந்த பாதுகாவலரை அடையாளம் காண அன்வார் சிறை அதிகாரிகளை தொடர்பு கொண்டதாக வான் ஜி கூறினார்.

இந்த விசயத்தை தனது வழக்கறிஞருக்கும் தெரிவித்ததாக கூறிய வான் ஜி, பின்னர் அவர் ஒரு காவல் துறை புகாரை அளிக்கும்படி கேட்டுக் கொண்டதாகக் குறிப்பிட்டார்.

இருப்பினும், பாதுகாவலர் பணியிலிருந்து நீக்கப்பட்டு விடுவார் என்ற எண்ணத்தில் அவர் அதனை செய்ய விரும்பவில்லை என்று கூறினார். வழக்கறிஞருடன் கலந்துரையாடிய பின்னர், அப்பாதுகாவலர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் அதற்கு பிறகு காவல் துறை புகாரை திரும்பப் பெறுவார் என்றும் வான் ஜி கூறினார்.