Home நாடு பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைவராக டாக்டர் மைக்கல் ஜெயகுமார்!

பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைவராக டாக்டர் மைக்கல் ஜெயகுமார்!

819
0
SHARE
Ad

ஈப்போ: பிஎஸ்எம் கட்சியின் புதிய தலைவராக முன்னாள் சுங்கை சிபுட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மைக்கல் ஜெயகுமார் தேவராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தலைவர் பதவியிலிருந்து விலகிய டாக்டர் நாசிர் ஹசிமுக்கு பதிலாக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கட்சித் தேர்தலில், எம்.சரஸ்வதிக்கு பதிலாக துணைத் தலைவராக முன்னாள் பொதுச் செயலாளர் எஸ்.அருட்செல்வன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிஎஸ்எம் கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.சிவராஜன் கூறுகையில், கட்சியின் இத்தேர்தலானது கடந்த 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்ட தலைமை மாற்றம் செயல்முறையின் நிறைவை குறிக்கிறது என்றார்.

#TamilSchoolmychoice

கட்சியின் மத்திய குழுவில்  பெரும்பான்மையான பெண்களைக் கொண்டிருப்பதாகவும், மேலும் பல புதிய முகங்களை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த ஜூலை 12-ஆம் தேதி முதல் ஜூலை 14-ஆம் தேதி வரையிலும் பிஎஸ்எம்மின் 21-வது தேசிய பொதுக் கூட்டத்தின் போது காஜாங்கில் இத்தேர்தல் நடைபெற்றது.