Home கலை உலகம் பிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்

1326
0
SHARE
Ad

சென்னை – ஞாயிற்றுக்கிழமை இரவு (ஜூலை 14) ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட ஐவரில் வனிதா வெளியேற்றப்பட இரசிகர்கள் வாக்களித்துள்ளனர் என கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த முறை பங்கேற்பாளர்கள் ஐவரை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்ற மற்ற பங்கேற்பாளர்கள் பரிந்துரைத்திருந்தனர். மோகன் வைத்யா, மதுமிதா, சரவணன், மீரா, வனிதா, ஆகியோரே அந்த ஐவராவர்.

சனிக்கிழமை (ஜூலை 13) நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், இந்த முறை புதிய பாணியில் வெளியேற்றுப் படலம் நடைபெறும் எனக் கூறினார். அதன்படி ஐவரில் மோகன் வைத்யா காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

மோகன் வைத்யா காப்பாற்றப்படுவதாகவும், எஞ்சிய நால்வரில் வெளியேற்றப்படவிருப்பது யார் என்பது நாளை (அதாவது ஞாயிற்றுக்கிழமை) தெரியவரும் என்றும் கூறி கமல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் வனிதா வெளியேற்றப்படுவதாக அறிவித்த கமல்ஹாசன் பின்னர் அவரை மேடையில் வெளியே அழைத்து கலந்துரையாடினார்.

இந்த முறை வெளியேற்றுப் படலத்திற்காக சுமார் 12 கோடிக்கும் மேற்பட்ட இரசிகர்கள் வாக்களித்தனர் எனவும் கமல் தெரிவித்தார்.