Home கலை உலகம் பிக்பாஸ் 3 : மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார்

பிக்பாஸ் 3 : மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார்

977
0
SHARE
Ad

சென்னை – நேற்று சனிக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட ஐவரில் மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டார் என கமல்ஹாசன் அறிவித்தார்.

இந்த முறை பங்கேற்பாளர்கள் ஐவரை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்ற பரிந்துரைத்திருந்தனர். மோகன் வைத்யா, மதுமிதா, சரவணன், மீரா, வனிதா, ஆகியோரே அந்த ஐவராவர்.

நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாடிய கமல்ஹாசன், இந்த முறை புதிய பாணியில் வெளியேற்றுப் படலம் நடைபெறும் எனக் கூறினார். அதன் பின்னர், அறையில் இருக்கும் ஒரு கடித உறையைப் படிக்காமல், யாருக்கும் காட்டாமல் எடுத்துவருமாறு, சாண்டியிடம் பணித்தார்.

#TamilSchoolmychoice

பிறகு அந்த கடித உறையில் இருக்கும் பெயரைத் தனக்கும் மட்டும் காட்டுமாறு கூறினார் கமல். அதில் மோகன் வைத்யா என எழுதப்பட்டிருந்தது. உடனே அழுது புலம்பிய மோகன் வைத்யா ஒவ்வொருவராக கட்டிப் பிடித்து, கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட கமல் “மோகன் ஏன் இப்படி அழுகிறீர்கள்? அந்தக் கடித உறை அட்டையில் கீழே என்ன எழுதியிருக்கிறது என்று பாருங்கள்” என்றார். மீண்டும் அந்த அட்டையைப் பார்த்த மோகனும் மற்ற பங்கேற்பாளர்களும் அதில் ஒன்றும் இல்லை என்று கூறினர்.

அப்போது, “இதோ மறுபாதி என்னிடம் இருக்கிறது” என்று காட்டி மோகன் வைத்யா காப்பாற்றப்படுவதாகவும், எஞ்சிய நால்வரில் வெளியேற்றப்படவிருப்பது யார் என்பது நாளை (அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை) தெரியவரும் என்றும் கூறி கமல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டிருக்கும் நிலையில், மதுமிதா, சரவணன், மீரா, வனிதா ஆகிய நால்வரில் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறப்போவது யார் என்பது இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிய வரும்.