Home உலகம் மின்சாரத் தடை – இருளில் மூழ்கியது நியூயார்க் நகரம்

மின்சாரத் தடை – இருளில் மூழ்கியது நியூயார்க் நகரம்

749
0
SHARE
Ad

நியூயார்க் – நேற்று சனிக்கிழமை இரவு (அமெரிக்க நேரப்படி-மலேசிய நேரப்படி இன்று ஞாயிற்றுக்கிழமை காலை) நியூயார்க் நகரத்தின் முக்கிய சில பகுதிகள் மின்சாரத் தடையினால் இருளில் மூழ்கியதால், இலட்சக்கணக்கான மக்கள் அவதிக்குள்ளாயினர். பல முக்கிய நிகழ்ச்சிகள் மின்சாரம் இன்றி இரத்து செய்யப்பட்டன.

பிரபல நடிகையும் மேடைப் பாடகியுமான ஜெனிபர் லோப்பஸ் நியூயார்க்கில் நடத்தவிருந்த கலைநிகழ்ச்சியும் இந்த மின்தடை காரணமாக இரத்து செய்யப்பட்டது. அதனைத் தனது டுவிட்டர் பக்கத்தில் காணொளியோடு வெளியிட்ட ஜெனிபர் லோப்பஸ், தனது நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டிருப்பதால் மனமுடைந்து போயிருப்பதாகவும் இதற்கான மாற்று நிகழ்ச்சியில் இரசிகர்களை முழு அளவில் திருப்திப்படுத்துவேன் என்றும் கூறினார்.

ஏராளமான எண்ணிக்கையில் அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட நியூயார்க் நகரில் தங்களின் இல்லங்களுக்குத் திரும்ப முடியாமல் பலர் அவதிப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், மின்சார இரயில்களும் செயல்பட முடியாத காரணத்தால், போக்குவரத்து நிலைகுத்தியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.