Home இந்தியா கர்நாடகா : தொடரும் நெருக்கடி – குமாரசாமி அரசு கவிழுமா?

கர்நாடகா : தொடரும் நெருக்கடி – குமாரசாமி அரசு கவிழுமா?

854
0
SHARE
Ad

பெங்களூரு – கர்நாடகா மாநில அரசாங்கத்தில் முற்றியிருக்கும் அரசியல் நெருக்கடி எதிர்வரும் திங்கட்கிழமை (ஜூலை 15) ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கர்நாடக மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானத்தை எதிர்நோக்கவும், தனது பெரும்பான்மையை நிரூபிக்கவும் தயார் என அறிவித்திருக்கும் கர்நாடகா முதல்வர் குமாரசாமி அதற்கு முன்பாகவே பதவி விலகுவாரா அல்லது சட்டமன்றப் பெரும்பான்மையை நிரூபிப்பாரா என அரசியலாளர்கள் ஆர்வத்துடன் கவனித்து வருகின்றனர்.

பாஜக – காங்கிரஸ் – ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள் சொகுசு தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களை தங்களின் கைப்பிடியில் வைத்திருக்க கட்சிகளின் தலைவர்கள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டிருக்கின்றனர்.