Home நாடு 11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்

11 கிலோமீட்டர் சைக்கிளில் சுற்றி வந்த மகாதீர்

1036
0
SHARE
Ad

சிப்பாங் – பிரதமராக இடைவிடாத பணிகளுக்கு இடையிலும், உடல் நலத்தைப் பேணுவதற்கு முக்கியத்துவம் வழங்கும் துன் மகாதீர் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) காலை இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் இளம் வயது சைட் சாதிக்குடன் இணைந்து சைக்கிளோட்டப் பயிற்சி மேற்கொண்டார்.

சிப்பாங் அனைத்துலக கார் பந்தய மைதானத்தில் இந்தப் பயிற்சியை மேற்கொண்ட மகாதீர் சைட் சாதிக்குடன் இணைந்து சுமார் 11 கிலோமீட்டர் தூரத்திற்கு சைக்கிள் ஓட்டி மகிழ்ந்தார்.

மகாதீருடன் சைக்கிளோட்டும் காட்சியை சைட் சாதிக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.