Home நாடு சிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை!

சிறைச்சாலை தரப்பு மீது வான் ஜி அவதூறு, காவல் துறை விசாரணை!

848
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிறையில் இருந்தபோது தாக்கப்பட்டதாக குற்றம் சாட்டி அவதூறு குற்றச்சாட்டு சுமத்தியதாக மத போதகர் வான் ஜி வான் ஹுசினை காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

சிலாங்கூர் மாநில குற்றப் புலனாய்வுத் துறைத் (சிஐடி) தலைவர் பாட்ஸில் அகமட், சிறைச்சாலை தரப்பிலிருந்து வான் ஜி மீது புகார் அளித்திருப்பதை உறுதிப்படுத்தினார்மேலும் இது தண்டனைச் சட்டம் பிரிவு 500-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.

1998-ஆம் ஆண்டுக்கான தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக சட்டம் பிரிவு 233-இன் கீழும் வான் ஜியை காவல் துறையினர் விசாரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

தேச நிந்தனை தூண்டுதலுக்கான முறையீடு தோல்வியடைந்த பிறகு, கடந்த ஜூலை 9-ஆம் தேதி வான் ஜி சிறையில் அடைக்கப்பட்டார்சிலாங்கூர் சுல்தானை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.