Home வணிகம்/தொழில் நுட்பம் “தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”

“தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டிகளுக்கு கெடா அரசாங்கம் ஆதரவாக இருக்கும்”

2185
0
SHARE
Ad
கெடா ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் ரெங்கசாமி

சுங்கைப்பட்டாணி – கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டி, கடந்த வெள்ளிக்கிழமை ஜூலை 19-ஆம் தேதி சுங்கைப்பட்டாணியில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி தேவஸ்தான சுங்கைப்பட்டாணி கெடாவில் சிறப்பாக நடைப்பெற்றது.

வரவேற்புரையாற்றிய தித்தியான் டிஜிட்டல் திட்ட இயக்குநர் கருப்பையா ஆறுமுகம் அவர்கள், கடந்த ஆண்டுகளை ஒப்பிடும் போது, இந்த வருடம் அதிகமான தமிழ்ப்பள்ளிகளும், மாணவர்களும் கலந்துக் கொண்டனர். மேலும் அடுத்த வருடம் கெடா மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் கலந்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து மாநில ஆட்சி குழு உறுப்பினரிடம், கெடா மாநிலத்தில் உள்ள 6 தமிழ்ப்பள்ளிகளில் தகவல் தொடர்பு தொழில்நுட்ப நடுவங்கள் செயல்படுகின்றன, ஆனால் பல நடுவங்கள் பொருளாதார சிக்கலினால் தொடர்ந்து செயல்பட முடியவில்லை. அதனால் மாநில அரசாங்கம் பள்ளிகளுக்கு நிதி உதவிகளை வழங்கினால், தொடர்ந்து இந்த நடுவங்கள் சிறப்பாக இயங்கும். கெடா மாநில அரசின் உதவியால், பல தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்துவர். தொடர்ந்து ஆதரவு தர கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் சண்முகம் ரெங்கசாமி அவர்களுக்கு தனது நன்றியை கருப்பையா தெரிவித்துக் கொண்டார்.

#TamilSchoolmychoice

தொடர்ந்து திறப்புறை ஆற்றிய கெடா மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஆர்.சண்முகம் வளர்ந்து வரும் தகவல் தொடர்பு தொழில்நுட்பம், எதிர்காலத்தில் சிறந்த ஆற்றல்மிக்க மாணவர்களை உருவாக்கும். அதன் தொடர் முயற்சியில் ஈடுபட்டுவரும் மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து தித்தியான் டிஜிட்டல் திட்டம் மேலும் பல தமிழ்ப்பள்ளிகளில் இக்கணினி நடுவம் செயல்பட அவர் உதவுவதாக கோடிக்காட்டினார். மேலும் இன்றைய போட்டியில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும், அவர்களை இப்போட்டிக்கு அழைத்து வந்த அவர்தம் ஆசிரியர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் சண்முகம்.

மேலும் அடுத்த வருடம் கெடா மாநிலத்தில் உள்ள அனைத்து தமிழ்ப்பள்ளிகளையும் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டு, இன்றைய போட்டிக்கு நன்கொடையாக இன்றைய நிகழ்ச்சியின் உணவை வழங்கி, மேலும் நன்கொடையாக  2000 ரிங்கிட் வழங்குவதாக அவர்தம் உரையில் தெரிவித்தார். மேலும் இப்போட்டியை ஏற்பாடு செய்த மலேசிய தித்தியான் டிஜிட்டல் இயக்கத்திற்கு தனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் கூறினார்.

இவ்வாண்டு கெடா மாநிலத்திருந்து இருந்து சுமார் 96 மாணவர்கள் 31 பள்ளிகளும் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

தகவல் தொடர்பு தொழில்நுட்ப போட்டியில் மொத்தம் 5 போட்டிகள் உள்ளன, அதில் புதிர்ப்போட்டி மாநில நிலையில் நடத்தப்பட்டு, தேசிய நிலைக்கு மாணவர்கள் தேர்வு பெறுவர். தேசிய நிலையிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் போட்டியில் இருபரிமாண அசைவூட்ட போட்டி, வரைதல் போட்டி, அகப்பக்கம் வடிவமைத்தல் போட்டி, & ஸ்கேரேச் போட்டி என அனைத்து போட்டிகளிலும் மாநில நிலையில் மாணவர்கள் தேர்வு பெற்று, தேசிய நிலையிலான போட்டியில் மாணவர்கள் கலந்துக் கொண்டு சிறந்த படைப்பை வழங்குவர்.

  1. Thanenessaran Subramaniam                  SJKT Kalaimagal, Sg. Petani
  2. Dhanesh Varmman Pragaas                     SJKT Wellesley, Lunas
  3. Hesshanni Puspnathan                              SJKT Kuala Muda Home, Sg. Petani
  4. Tevakar  Kumareson                                 SJKT Paya Kamunting, Jitra
  5. Velan Vallakrishnin                                  SJKT Victoria, Padang Serai
  6. Thaneeshwar Subramaniam                    SJKT Saraswathy, Sg. Petani
  7. Leyshvin Manimaran                                SJKT Scraboro Bhg 2 , Sg. Petani
  8. Raness Thangaraj                                      SJKT Mahajothi, Sg. Petani
  9. Sharvin Sivanesan                                     SJKT Wellesley, Lunas
  10. Rosan Rajeshkhanna                                 SJKT Saraswathy, Sg. Petani
  11. Nithya Priya Nayaki Devendran              SJKT Scraboro Bhg 2 , Sg. Petani
  12. Matthew Michael Dass                              SJKT Ldg Henrietta, Pdg Serai
  13. Kiruthika Vijaykumar                              SJKT Arumugam Pillai, Sg. Petani
  14. Tanushwri Lingam                                    SJKT Kalaimagal, Sg. Petani
  15. Nalan Sivakumar                                       SJKT Ko Sarangapany, Sg. Petani
  16. Steven Simon                                              SJKT Saraswathy, Sg. Petani
  17. Vinietaasrree K. Pusparaajan                  SJKT Kalaimagal, Sg. Petani
  18. Vaisnavi  Kamalahasan                             SJKT Mahajothi, Sg. Petani
  19. Jaganesh Gopi                                            SJKT Arumugam Pillai, Sg. Petani
  20. Thrivenraj Vimalathithan                        SJKT Sg. Ular, Kulim
  21. Hanusri  Kathiresan                                  SJKT Bkt Selarong, Kulim
  22. Dhivyaanjali Thanabal                              SJKT Saraswathy, Sg. Petani
  23. Thiruneswary Muniandy                          SJKT Lubok Segintah, Sg. Petani
  24. Sacchidran Kalithasan                              SJKT Ldg Victoria, Pdg. Serai
  25. Yuveta Shandran                                      SJKT Saraswtahy, Sg. Petani

கெடா மாநில அளவிலான தகவல் தொடர்பு தொழில்நுட்பப் புதிர்ப் போட்டியில் பங்கு பெற்ற கெடா மாநில மாணவர்களின் உற்சாகத் தோற்றத்துடன் படக் காட்சிகள்: