கோலாலம்பூர்: 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தை இரத்து செய்து அதனை புதிய சட்டத்துடன் மாற்றும் நடவடிக்கையை அரசாங்கம் விரைவில் மேற்கொள்ளும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.
முதலாக இந்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் கூறினார். தேச நிந்தனைச் சட்டத்தை மாற்றும் புதிய சட்டம் நிறைவடையும் நிலையில் உள்ளது என்றும் அவர் குறிப்பிடார்.
மக்களை அடக்கப்படுவதாகக் கருதப்படும் ஒரு சில சட்டங்களை நீக்குவது குறித்து கடந்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹாராப்பான் அரசு அளித்த வாக்குறுதிகளில் அடங்கி இருந்தது. குறிப்பாக, கருத்துச் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் தேச நிந்தனைச் சட்டம் இதில் அடங்கும்.
இந்த வார தொடக்கத்தில் இஸ்லாமிய மத போதகர் வான் ஜி வான் ஹுசேன், தேசத் நிந்தனைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.