Home நாடு சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களை காவல் துறை மீட்பு!

சங்கிலியால் கட்டப்பட்டு துன்புறுத்தப்பட்ட இந்திய தொழிலாளர்களை காவல் துறை மீட்பு!

693
0
SHARE
Ad

லிப்பிஸ்: கடந்தாண்டு டிசம்பர் மாதம் தோட்டத் தொழிலுக்காக வாக்குறுதியளிக்கப்பட்டு, பின்பு முதலாளிகளால் துன்புறுத்தப்பட்ட நிலையில் மூன்று இந்திய நாட்டவர்களை காவல் துறையினர் காப்பாற்றியுள்ளனர்.  அவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு, விடுப்பு ஏதும் வழங்கப்படாத நிலையில், ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கு ஓய்வில்லாமல் வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், அவர்களில் ஒருவர் தப்பிச் சென்று இறுதியில் கடந்த சனிக்கிழமையன்று பகாங்கின் லிப்பிஸில் உள்ள கம்போங் ஜெராம் புங்கார் கெராம்பிட்டில் உள்ள ஒரு பகுதியில் காவல் துறையினரால் மீட்கப்பட்டார்.

லிப்பிஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர், கண்காணிப்பாளர் அஸ்லி முகமட் நூர் கூறுகையில், அவர்களின் முதலாளி என நம்பப்படும் உள்நாட்டைச் சேர்ந்த 36 வயதுடைய ஆடவனை இவ்விவகாரம் தொடர்பில் கைது செய்யுள்ளதாகக் கூறினார்.

#TamilSchoolmychoice

சென்பனைத் தோட்டத்தில் பணியாற்றுவதற்காக கடந்த டிசம்பரிலிருந்து அவர்கள் இந்தியாவில் உள்ள முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இருப்பினும், கடந்த டிசம்பர் 15-ஆம் தேதி முதல் இன்று வரை, பாதிக்கப்பட்டவருக்கு 600 ரிங்கிட் ஊதியத்தை மட்டுமே வழங்கி உள்ளார்கள்” என்று அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களின் கடப்பிதழ்கள் மற்றும்  கைபேசிகள் முதலாளியின் மகனால் கைப்பற்றப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதக் காலமாக 48 வயதுடைய ஒருவர் சங்கிலியால் அடித்து தாக்கப்பட்டு  இடது கை காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளார்” என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் காவல் துறையினர் அவ்வீட்டைச் சோதனையிட்ட பிறகு விசாரணைக்கு உதவுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்களின் முதலாளியை நான்கு நாட்களுக்கு தடுத்து வைத்துள்ளனர்.

2007-ஆம் ஆண்டுக்கான தனிநபர் கடத்தல் தடுப்பு மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்புச் சட்டம்  பிரிவு 13-இன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.