Home கலை உலகம் விக்ரம்58: அஜய் ஞானமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் விக்ரம்!

விக்ரம்58: அஜய் ஞானமுத்து, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணையும் விக்ரம்!

935
0
SHARE
Ad

சென்னை: நடிகர் விகரம் நடிப்பில் 58-வது படமாக உருவாகப்படவுள்ள படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மீரா படத்தில் பிசி ஶ்ரீராம் இயக்கத்தில் அறிமுகமான விகரம், மூன்றாவது முறையாக அஜய் ஞானமுத்து கூட்டணியில்  இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுடன் இணைந்துள்ளார்.

இந்த புதிய படத்தை லலித்குமார் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகோம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இந்தப்படத்திற்கு மகுடம் சேர்ப்பது போல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இணைந்துள்ளார் என்பது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

#TamilSchoolmychoice

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய இரண்டு படங்களிலும் தனக்கென ஓர் தனி முத்திரையைப் பதித்தவர் இயக்குனர் அஜய் ஞானமுத்து.  

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கிறது. 2020-இல் ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது.

திகில் மற்றும் முற்றிலும் மாறுபட்ட கதை அம்சத்தோடு மிகப்பிரம்மாண்டமாக தயாராக இருக்கும் இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது