சென்னை: தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து இரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மேட்டுசக்கர குப்பத்தில் இருந்து ஜோலார்பேட்டை இரயில் நிலையம் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து சோதனை ஓட்டம் பார்க்கப்பட்ட நிலையில், அப்போது சில இடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. அது சரிசெய்யப்பட்டு சுமார் நான்கு மனி நேர பயணத்திற்கு பிறகு இரயில் வில்லிவாக்கம் இரயில் நிலையத்தை வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது.
மொத்தமாக ஓர் இரயிலில் 27 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சென்னை நகர மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படும்.
இதே போல் ராஜஸ்தானில் இருந்து மற்றொரு இரயில் சென்னைக்கு தண்ணீரைக் கொண்டு வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் வாழும் மக்கள் தண்ணீர் தட்டுப்பாடின்றி வாழ வழி ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.