Home 13வது பொதுத் தேர்தல் போட்டியிடப்போகும் தொகுதியை இன்று இரவு அன்வார் அறிவிப்பார்

போட்டியிடப்போகும் தொகுதியை இன்று இரவு அன்வார் அறிவிப்பார்

549
0
SHARE
Ad

ANWARபெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 4 – எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தில் போட்டியிடப்போவதாக நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து, அவர் எந்த தொகுதியில் போட்டியிடப்போகிறார் என்பதை இன்று இரவு பெராக் மாநிலத்திலுள்ள கிரீக்கில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து பி.கே.ஆர் கட்சியின் தகவல் தொடர்பு தலைவர் மற்றும் பேராக் மாநில பி.கே.ஆர் தலைவருமான டாக்டர் முகமத் நோர் மனுட்டி கூறுகையில்,

“பேராக் மாநில வேட்பாளர்கள் பட்டியலை இன்று இரவு கிரீக்கில் நடைபெறவிருக்கும் மாநாட்டில் அறிவிக்கப்போகும் அன்வார், அத்தோடு தான் போட்டியிடப்போகும் தொகுதியையும் அறிவிப்பார்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice