கோலாலம்பூர் – டாக்டர் மகாதீர் முகமட் பதவிக்காலம் முடியும் வரை பிரதமராக இருப்பதை ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய ஹாடி அவாங், பிரதமரின் பதவிக்காலம் முதிர்ச்சியடைந்ததும், நாட்டின் நிலையானது நல்லதொரு மாற்றத்தை அடைந்ததும் அது குறித்து பேசலாம் என்று கூறியுள்ளார்.
மகாதீருக்கு தனது கடமைகளை முடிக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறியதாக கூறப்படுகிறது.
“அவருக்கு அனுபவம் உண்டு. நீண்ட காலம் பிரதமராக பணியாற்றி வருகிறார். எனவே அவரது பணிகளை அவர் செய்து முடிக்கும் வரை அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
டாக்டர் மகாதீர் கடந்த தேர்தலில் பெரும்பான்மை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதால் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு அவரை கட்டாயப்படுத்தக்கூடாது என்று அப்துல் ஹாடி முன்பு கூறியிருந்தார்.
மேலும், பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் பிரதமராக பதவியேற்பதற்காக டாக்டர் மகாதீரை பதவி விலகக் கோருவதை நிறுத்த வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார் .