Home One Line P1 நஜிப்பின் வங்கிக் கணக்கில் 10 மில்லியனை செலுத்தும் முடிவை ஜோ லோ எடுத்தார்!

நஜிப்பின் வங்கிக் கணக்கில் 10 மில்லியனை செலுத்தும் முடிவை ஜோ லோ எடுத்தார்!

693
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த 2015-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் துணை நிறுவனங்களான காண்டிங்கான் மென்தாரி செண்டெரியான் பெர்ஹாட் மற்றும் ஏஷான் பெர்டானா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனங்களிலிருந்து 10 மில்லியன் ரிங்கிட்டை நஜிப்பின் 880 என்று முடிவடையும் வங்கிக் கணக்கில் செலுத்திய விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பவராக சர்ச்சைக்குரிய தொழிலதிபர் ஜோ லோ கருதப்படுகிறார்.

அம்பேங்க் வங்கியின் முன்னாள் மக்கள் தொடர்பு மேலாளர் ஜோஹானா யூ வழக்கறிஞர் ஹர்விந்தர்ஜித் சிங், ஜோ லோ, தெரென்ஸ் கெஹ் மற்றும் உங் சு லிங் போன்ற பிற நபர்களின் ஆலோசனையுடன் இந்த செயல்முறை ஏற்பாடு செய்யப்பட்டதாக ஒப்புக்கொண்டார்.

1 மலேசியா மக்கள் அறக்கட்டளையின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரியாக உங் இருந்துள்ளார். 1எம்டிபியின் முன்னாள் நிதி நிருவாக இயக்குனராக கெஹ் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.