Home One Line P1 பணி நிமித்தமாக லிம் கிட் சியாங், பேராசிரியர் இராமசாமி இந்தியா பயணம்!

பணி நிமித்தமாக லிம் கிட் சியாங், பேராசிரியர் இராமசாமி இந்தியா பயணம்!

884
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று வியாழக்கிழமை தொடங்கி வருகிற ஆகஸ்டு 7-ஆம் தேதி வரையிலும் பணி நிமித்தமாக இஸ்காண்டார் புத்ரி நாடாளுமன்ற உறுப்பினரான லிம் கிட் சியாங் மற்றும் பினாங்கு துணை முதல்வரான பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி மலேசிய பேராளர்கள் குழுவிற்கு தலைமை ஏற்று இந்தியா சென்றுள்ளனர்.

பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சத்தீஸ் முனியாண்டி மற்றும் இகோ வோர்ல்ட் டெவெலப்மண்ட் குருப் நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி (சிஒஒ) டத்தோ சுந்தரராஜு சோமு ஆகியோரும் இந்த பேராளர்கள் குழுவில் இணைந்து சென்றுள்ளனர்.

புது டில்லி, பெங்களூரு, சேலம், மற்றும் சென்னையில் இந்திய தலைவர்கள், வணிக குழுக்கள், மலேசிய தூதர்கள் மற்றும் மாணவர்களை அவர்கள் சந்திக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.