Home One Line P1 “மலாய் கலாச்சாரத்தை உயர்த்தி பிடிப்போம், அரேபியத்தை அல்ல!”- ராயிஸ் யாத்திம்

“மலாய் கலாச்சாரத்தை உயர்த்தி பிடிப்போம், அரேபியத்தை அல்ல!”- ராயிஸ் யாத்திம்

1514
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலாய்க்காரர்களின் கலாச்சாரத்தை முதன்மையாகக் கொண்டு, அதிலிருக்கும் அரேபியத்தை கூட்டாக ஒழிக்க கலாச்சார போராளிகளுக்கு முன்னாள் அரசாங்க சமூகவியலாளர் ராயிஸ் யாத்திம் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்லாமியத்திலிருந்து அரேபியத்தை வெளியேற்றுவது பற்றி பலர் பேசத் துணிய மாட்டார்கள் என்றும், அரேபியர்கள் மலாய் தீவுக்கூட்டத்தை விட சிறந்தவர்கள் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.

சவுதி அரேபியா இப்போது யெமனைக் கொல்கிறது. இஸ்லாமிய கலாச்சாரம் எங்கே போய் விட்டது? மீண்டும் ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்புபவர் யார்? மலேசியாவும் இந்தோனிசியாவும் குறிப்பாக எதிர்கால கலாச்சார உலகிற்கு ஒரு சிறந்த உதாரணத்தை அளிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்க விரும்புகிறேன்.” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

மலேசிய கலாச்சாரத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சிகள் மொழியிலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்றும், தேசிய மொழி கட்டமைப்பை மாற்றியமைத்த ஆங்கிலத்தின் ஊடுருவலில் இருந்து அவற்றைக் கற்றுக் கொள்ள கலாச்சார போராளிகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

“மலாய் மொழியைப் பாதுகாப்பதற்கான முயற்சி கடினமானது, ஆனால் முயற்சி செய்ய வேண்டும். அதற்காக மலேசியா நமது சிந்தனை மற்றும் செயலின் அடித்தளங்களுக்குத் திரும்ப வேண்டும்” என்று ராயிஸ் கூறினார்.

நம்மை அரேபியர்களாக்க விடக் கூடாது, ஆயினும், இஸ்லாமியர்களாக இருக்க விட வேண்டும். மலாய் கலாச்சாரத்தைக் உயர்த்தி பிடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.