Home One Line P1 பெர்சாத்து கட்சி அமைச்சர்கள், செனட்டர்கள், மந்திரி பெசார்களை சந்தித்த மகாதீர்!

பெர்சாத்து கட்சி அமைச்சர்கள், செனட்டர்கள், மந்திரி பெசார்களை சந்தித்த மகாதீர்!

697
0
SHARE
Ad
படம்: நன்றி சைட் சாதிக் டுவிட்டர் பக்கம்

கோலாலம்பூர்: பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று பெர்சாத்துவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்டர்கள் மற்றும் மந்திரி பெசார்களுடன் இரகசிய சந்திப்புக் கூட்டத்தை நடத்தியதாக நம்பப்படுகிறது.

இக்கூட்டத்தில் எது குறித்து முக்கியமாக பேசப்பட்டது என்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த சந்திப்புத் தொடர்பான புகைப்படங்களை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

நாங்கள் துன் டாக்டர் மகாதீருக்கு எங்கள் முழு ஆதரவையும் வழங்குகிறோம், மேலும், மக்களின் போராட்டத்தில் கவனம் செலுத்துவோம். ஆணவம் இருக்கத் தேவையில்லை, அனைவருக்கும் நேர்மையாக சேவை செய்யுங்கள்என்று இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

சமீபக் காலமாக பிரதமர் பதவி மாற்றம் குறித்த கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.