இதுவரை எந்த குற்றவியல் கூறுகளும் கண்டறியப்படவில்லை என்றும், இந்த விவகாரம் இன்னும் “காணவில்லை” என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் நெகிரி செம்பிலான் காவல் துறைத் தலைவர் முகமட் மாட் யூசோப் தெரிவித்தார்.
“பாதிக்கப்பட்டவர் இன்னும் அருகிலேயே இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்கள் மீட்புப்படைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
எந்தவொரு தகவலும் துல்லியமாக இருக்க வேண்டும் என்றும், தேவையற்ற கதைகளை இந்த விவகாரத்தில் சேர்க்கக்கூடாது என்றும் முகமட் கேட்டுக் கொண்டார்.
“தவறான தகவல்களை பரப்பியதற்காக நாங்கள் சம்பந்தப்பட்டவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், சரியான தகவலை வழங்குவதில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் ஒத்துழைப்பு இருந்தால் இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்க முடியும்” என்று அவர் கூறினார்.