அவருக்கு எதிரான வழக்கு உள்நாட்டு வருவாய் வாரியத்தால் அரசாங்கத்தின் சார்பாக ஜூலை 24-ஆம் தேதியன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்ற பதிவேட்டில் தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 18-ஆம் தேதியன்று கோலாலம்பூரில் உள்ள எல்எச்டிஎன் அலுவலகத்தில் மதிப்பீட்டு அறிவிப்பைப் பெற்ற 30 நாட்களுக்குள், நிதியை திருப்பிச் செலுத்தத் தவறியதால் மொத்தத் தொகையிலிருந்து 10 விழுக்காடு அவருக்கு விதிக்கப்பட்டது.
60 நாட்களுக்குள் பணம் செலுத்தத் தவறியதற்காக, பிரதிவாதி மேலும் ஐந்து விழுக்காடு உயர்வுடன் மொத்தமாக 37,644,810.73 ரிங்கிட் வரியைச் செலுத்த வேண்டியதாயிற்று.