Home One Line P1 இந்தோனிசிய அதிபரை புரோட்டோன் காரில் அழைத்துச் சென்ற பிரதமர்!

இந்தோனிசிய அதிபரை புரோட்டோன் காரில் அழைத்துச் சென்ற பிரதமர்!

836
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் இந்தோனிசிய அதிபதி ஜோகோ விடோடோவை, பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான ஶ்ரீ பெர்டானாவிற்கு மதிய விருந்திற்காக, புரோட்டான் பெர்சோனா காரில் அழைத்துச் சென்றார்.

இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பிற்குப் பிறகு அவர்கள் காரில் வெளியேறியதைக் கண்டதும் அனைத்து ஊடகங்களும் படம் பிடிக்கத் தொடங்கினர்.

ஜோகோவி என பிரபலமாக அழைக்கப்படும் ஜோகோ, நேற்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) மலேசியாவுக்கு இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்டுள்ளார். அவருடன் அவரது மனைவி இரியானா ஜோகோ விடோடோவும் வந்துள்ளார்.

#TamilSchoolmychoice

பி2367ஏ பதிவு எண்ணைக் கொண்ட சிவப்பு நிற புரோட்டோன் பெர்சோனா காரை டாக்டர் மகாதீர் ஓட்டினார்