Home One Line P1 “அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்ற பதவி விலகுங்கள்” – மகாதீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல்

“அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்ற பதவி விலகுங்கள்” – மகாதீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல்

723
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்றும் பொருட்டு பிரதமர் துன் மகாதீர் கௌரவமாக பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என பிகேஆர் கட்சியைச் சேர்ந்த ஜோகூர் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் (படம்) தெரிவித்துள்ளார்.

இல்லாவிட்டால் கடந்த காலங்களில் நாட்டில் உருவாகிய காகாசான் ராயாட், பாரிசான் அல்டர்நேடிவ், பக்காத்தான் ராயாட் போன்ற கூட்டணிகள் தோல்வியடைந்ததைப் போன்று நம்பிக்கைக் கூட்டணியும் தோல்வி காணும் என அவர் எச்சரித்தார்.

“மகாதீர், முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் வின்சன்ட் சர்ச்சிலின் முன்னுதாரணத்தைப் பின்பற்ற வேண்டும். பிரிட்டன் மற்றும் கூட்டுப் படைகளுக்குத் தலைமையேற்று இரண்டாவது உலகத்தில் வெற்றி பெற்று, ஜெர்மனியையும், ஜப்பானையும் தோற்கடித்த பின்னரும் அவர் தனது பதவியிலிருந்து விலகினார். அதேபோன்று துணிச்சலான ஒரு முடிவை மகாதீரும் எடுக்க வேண்டும்” என்றும் ஹசான் அப்துல் கரிம் கூறியிருக்கிறார்.

#TamilSchoolmychoice

தேசிய முன்னணியை வீழ்த்தி, கடந்த பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கத்தை நிர்மாணித்து, சுமுகமான அதிகார மாற்றம் நடைபெறக் காரணமாக இருந்ததற்காக மகாதீர் எப்போதும் நினைவுகூரப்படுவார் என்று கூறிய ஹசான் எனினும் மக்களை பிரித்திருக்கும் பல்வேறு விவகாரங்கள் உலுக்கி வருவதால் அரசாங்கத்தைக் காப்பாற்ற பிரதமர் பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பதற்கான பொருத்தமான நேரம் இதுதான் என்றும் தெரிவித்தார்.