Home நாடு பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீமுக்கு எதிராக நடவடிக்கை இல்லை!

பாசீர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீமுக்கு எதிராக நடவடிக்கை இல்லை!

172
0
SHARE
Ad
ஹாசான் கரீம்

பெட்டாலிங் ஜெயா: அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ந்து கண்டனக் கருத்துகளை வெளியிட்டு வந்தவர் பாசிர் கூடாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாசான் கரீம். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வலியுறுத்தி அவர் பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.

எனினும் பிகேஆர் உச்சமன்ற செயலவை அவருக்கு எதிராக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்த்து விட்டது.

“இன்று சனிக்கிழமை (நவம்பர் 30) நடந்த உச்சமன்றக் கூட்டத்தில் ஹாசானுக்கு எதிரான ஒழுக்கச் சம்பந்தமான அறிக்கையைப் பற்றி விவாதிக்கப்பட்டது, மேலும் அவவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டியதில்லை என்று முடிவு செய்யப்பட்டது,” என்று பிகேஆர் தகவல் பிரிவுத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பிகேஆர் உச்சமன்றக் கூட்டத்தின் முடிவுக்கு ஹாசான் தனது நன்றியைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தை பொதுவில் விமர்சித்ததற்காகவும், குறிப்பாக இரண்டாவது 5ஜி  அலைக்கற்றை செயலாக்கம் தொடங்குவதற்கான ஒப்பந்தத்தை யூ மோபைல் சென்டிரியார் பெர்ஹாட் நிறுவனத்திற்கு (U Mobile Sdn Bhd) வழங்கியதற்கான முடிவை விமர்சித்ததற்காக, ஹாசான் ஒழுங்கு நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.