Home One Line P1 இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்காக பொதுக் கூட்டம் ஏற்பாடு!

இஸ்லாமியர்களின் ஒற்றுமைக்காக பொதுக் கூட்டம் ஏற்பாடு!

612
0
SHARE
Ad
படம்: நன்றி என்எஸ்டிபி

கோலாலம்பூர்: வருகிற ஆகஸ்ட் 25-ஆம் தேதி கோலாலம்பூரில் உம்மா பாதுகாவலர்கள் இயக்கம் நடத்த இருக்கும் பொதுக் கூட்டத்தில், இஸ்லாமிற்கு எதிரான தாக்குதல், கிறிஸ்தவத்தின் அச்சுறுத்தல்கள் மற்றும் மலாய் முஸ்லிம்களின் நிலைப்பாட்டை பாதிக்கும் என நம்பப்படும் சட்டத் திருத்தம் குறித்து விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாடு, நாட்டில் உள்ள முஸ்லிம்களை ஒன்றிணைப்பதை நோக்கமாகக் கொண்டது என்று உம்மா தலைவர் அமினுடின் யஹாயா கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.

மலாய் இனத்திற்கும், இஸ்லாமிய மதத்திற்கும் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாகவும், மலாய்க்காரர்கள் இன்னும் பிளவுபட்டுள்ளதாகவும் நாங்கள் உணர்கிறோம்,” என்று அவர் கூறியதாக மலேசிய இன்சைட் குறிப்பிட்டுள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாட்டில் முஸ்லிம்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாதக் காரணத்தால், அவர்களின் இனத்தையும் மதத்தையும் பாதுகாக்க உதவியற்றவர்களாக ஆகிவிட்டார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையானது மற்றவர்கள் தங்கள் சொந்தக் காரணங்களுக்காக போராடும் வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.