Home கலை உலகம் அஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள்

அஸ்ட்ரோவில் தமிழில் புதிய துல்லிய ஒளிபரப்பு (எச்.டி) அலைவரிசைகள்

1223
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இன்று வியாழக்கிழமை ஆகஸ்ட் 15-ஆம் தேதி தொடக்கம் அஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் ஸ்டார் விஜய் மற்றும் சன் டிவி அலைவரிசைகளின் உள்ளடக்கங்களைத் துல்லிய ஒளிபரப்பில் (எச்.டி) கண்டு மகிழலாம்.

அதே வேளையில், அண்மையில் மேம்படுத்தப்பட்ட தங்கத்திரை அலைவரிசை 241-இன் புதிய திரைப்படங்களைத் தற்போது எச்.டி-யில் கண்டு களிக்கலாம்.

#TamilSchoolmychoice

ஸ்டார் விஜய் எச்.டி (அலைவரிசை 232) மற்றும் சன் டிவி எச்.டி (அலைவரிசை 234) திரைப்படங்கள், நாடகங்கள், உண்மை நடப்பு (ரியாலிட்டி) நிகழ்ச்சிகள் மற்றும் தொடர் நாடகங்கள் போன்ற உள்ளடக்கங்களை அஸ்ட்ரோ கோ – இணைப்பிலும் இடம்பெறும். ஸ்டார் விஜய் எச்.டி-யில் சூப்பர் சிங்கர் சீசன் 7, பிக் பாஸ் சீசன் 3, பாண்டியன் ஸ்டோர்ஸ், மௌன ராகம், பாரதி கண்ணம்மா, எங்கிட்ட மோதாதே சீசன் 2 நிகழ்ச்சிகளும் சன் டிவி எச்.டி-யில் சன் சிங்கர், லட்சுமி ஸ்டோர்ஸ், ரோஜா, கல்யாண பரிசு, வள்ளி ஆகிய நிகழ்ச்சிகளும் ஒளியேறுகின்றன.

அதுமட்டுமின்றி, ஆன் டிமாண்ட் சேவையை அணுகி ஸ்டார் விஜய் எச்.டி அலைவரிசை 232-யின் குறிப்பிட்ட உள்ளடக்கங்களையும் தங்கத்திரை அலைவரிசை 241-யில் இம்மாதம் ஒளியேறும் கேம் ஓவர், செவன், ராட்சசி, ஹவுஸ் ஓனர் ஆகிய திரைப்படங்களையும் கண்டு களிக்கலாம்.