Home One Line P1 “21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்!”- நரேந்திர மோடி

“21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம்!”- நரேந்திர மோடி

756
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் 73-ஆம் ஆண்டு சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது உரை நிகழ்த்திய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, 21-ஆம் நூற்றாண்டுக்கான இந்தியாவை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வளர்ச்சிக்கு இருந்த தடைகளை கடந்த பத்து வாரக் கால ஆட்சியில் நீக்கியிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்துள்ளது. மேலும், பேசிய மோடி, நாட்டின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருவதாகவும், அதனால் அப்பகுதிகள் வெள்ளத்தால் பரிதவித்துக் கொண்டிருக்கிறது என்றும் குறிப்பிட்டார். அங்கு மீட்பு படையினர் நேரம் காலம் பார்க்காமல் பணியாற்றிக் கொண்டிருப்பது மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக ஏராளமானோர் தங்களது உயிர்களை தியாகம் செய்திருக்கின்றனர். அவர்களுக்கு மரியாதை செலுத்திக் கொள்கிறேன். எங்கள் அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து அரசின் நிருவாக அமைப்புகளை வலிமைப்படுத்தி வருகிறோம். இதன் மூலம் நாடு விரைவான வளர்ச்சியை காண முடியும்.” என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆட்சிக்கு வந்து கடந்த குறுகிய காலத்தில் மிக முக்கியமான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகக் கூறிய மோடி,  காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கம், முத்தலாக் தடை உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுக் கூறினார்.