Home One Line P2 மேக்சிஸ் – அஸ்ட்ரோ இணைந்து உள்ளடக்கங்களோடு கூடிய அகண்ட அலைவரிசையை வழங்குகின்றன

மேக்சிஸ் – அஸ்ட்ரோ இணைந்து உள்ளடக்கங்களோடு கூடிய அகண்ட அலைவரிசையை வழங்குகின்றன

1022
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நாட்டின் தகவல், தொழில்நுட்பத் தொடர்புத் துறையில் இருபெரும் நிறுவனங்களாக மேக்சிஸ் மற்றும் அஸ்ட்ரோ திகழ்கின்றன. செல்பேசிகளுக்கான கட்டண சேவையை வழங்குவதோடு, பல்வேறு தொலைத் தொடர்பு வசதிகளை வழங்கி வரும் நிறுவனம் மேக்சிஸ். நாட்டின் முதல் நிலை தொலைத் தொடர்பு நிறுவனமாகக் கருதப்படுகிறது.

அஸ்ட்ரோ, தனியார் தொலைக்காட்சித் துறையில் துணைக்கோள ஒளிபரப்பில் ஏகபோக உரிமையைக் கொண்டிருக்கும் நிறுவனம்.

இரண்டு நிறுவனங்களுமே நாட்டின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான ஆனந்த கிருஷ்ணனை உரிமையாளராகக் கொண்ட நிறுவனங்கள்.

#TamilSchoolmychoice

இன்று வியாழக்கிழமை விடுக்கப்பட்ட அறிவிப்பின்படி, இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து அகண்ட அலைவரிசை சேவையை வழங்கவிருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், மேக்சிசின் புதிய அகண்ட அலைவரிசை சேவையில் அஸ்ட்ரோவின் உள்ளடக்கங்களும் இணைக்கப்பட்டிருக்கும்.

ஒரு வினாடிக்கு 30 மெகாபைட் மற்றும் 100 மெகாபைட் விரைவு தளத்தில் (Mbps) இந்த அகண்ட சேவைகள் முதற்கட்டமாக வழங்கப்பட்டு பின்னர் இதன் விரைவு (higher broadband speeds) நாளடைவில் அதிகரிக்கப்படும்.

மேக்சிஸ் அகண்ட அலைவரிசைக்கு சந்தாதாரர்களாக பதிவு செய்பவர்கள் இனி, அஸ்ட்ரோவின் நிகழ்ச்சிகளையும், உள்ளடக்கங்களையும் கண்டு களிக்க முடியும். அஸ்ட்ரோவும் மேக்சிசும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் இந்தத் தகவல்களைத் தெரிவித்துள்ளன.

இந்தப் புதிய ஏற்பாடுகளின் மூலம் அஸ்ட்ரோ வைத்திருப்பவர்கள் மேக்சிஸ் அகண்ட அலைவரிசையைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும் அதே வேளையில், மேக்சிஸ் அகண்ட அலைவரிசையை மட்டும் வைத்திருப்பவர்களுக்கு இனி அஸ்ட்ரோவின் சந்தாதாரராக உருமாறும் வாய்ப்பும் கிட்டும்.