கோலாலம்பூர்: இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரின் ஜாகிர் நாயக்கின் சொற்பொழிவு ‘மிதக்கும் மசூதி’ என அழைக்கப்படும் அல் ஹுசைன் மசூதியில் நடக்க இருப்பதாக அவரது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், அவரும் அவரது குடும்பத்தினரும் இம்முறை கோலா பெர்லிஸில் உள்ள அம்மசூதியில் உரை நிகழ்த்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக கிளந்தானில் நடைபெற்ற சொற்பொழிவின் போது மலேசிய இந்தியர்களையும், சீனர்களையும் அவமதித்தாக ஜாகிர் மீது பெரு அளவிலான எதிர்ப்புகள் நாடு தழுவிய அளவில், நிகழ்ந்து வரும் இவ்வேளையில், அவரது தற்போதைய இந்த நிகழ்ச்சி முஸ்லிம் அல்லாதவர்கள் மத்தியில் மேலும், சீற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. சர்ச்சையாகப் பேசியப் பிறகும் இவரது நிகழ்ச்சி அரசாங்கத்தால் நடத்த அனுமதிக்கப்படுவது குறித்து கேள்விகள் மக்களிடத்தில் எழுந்துள்ளது.
இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் பெர்லிஸ் முப்தி முகமட் அஸ்ரி சைனுல் அபிடின், சாம்ரி வினோத், ரிதுவான் டீ அப்துல்லா உள்ளிட்ட பல முக்கிய போதகர்கள் இடம் பெற்றுள்ளனர்.