Home One Line P1 “எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்!”- ஜோகூர் சுல்தானா

“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்!”- ஜோகூர் சுல்தானா

1427
0
SHARE
Ad

ஜோகூர்: ஜோகூர் சுல்தானா ராஜா சாரித் சோபியா மறைந்த தனது சீன இனத்தைச் சேர்ந்த பாட்டியை நினைவுக்கூர்ந்து முகநூலில் பதிவொன்றை பதிவிட்டுள்ளார்.

என் பாட்டியும் ஒரு மலேசியர் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். என் குழந்தைகள்கலப்பு இரத்தத்துடன் பிறந்திருந்தாலும் கூட, என்னைப் போல அவர்களும் மலேசியர்கள் என்பதை நான் அறிவேன்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தெங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் குழந்தையாக இருந்த போது, அவரது சீன பாட்டியுடன் எடுத்துக் கொண்டப் படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவர் ஒரு பெரானாக்கான் சீனர். அவரது மறைந்த சகோதரர் டான்ஸ்ரீ சாங் மின் டாட் மலேசிய கூட்டரசு பிரதேச நீதிமன்றத்தின் நீதிபதி ஆவார்” என்று அவர் கூறினார்.

சமீபத்தில், நாட்டில் சீனர்களைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தினை வெளியிட்ட இந்திய வம்சாவளி இஸ்லாமிய மத போதகர் டாக்டர் ஜாகிர் நாயக்கின் கூற்றினைத் தொடர்ந்து ஜோகூர் சுல்தானா இப்பதிவினை எழுதியுள்ளார்.