Home One Line P1 உத்துசான் மலேசியா நாளிதழ் புதன்கிழமையோடு நிறுத்தம்!

உத்துசான் மலேசியா நாளிதழ் புதன்கிழமையோடு நிறுத்தம்!

1038
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவின் மிகப் பழமையான மலாய் மொழி செய்தித்தாளான உத்துசான் மலேசியா வருகிற புதன்கிழமை தனது செயல்பாட்டை உறுதி செய்யப்படாத தேதி வரைக்கும் நிறுத்தக்கூடும் என்று அதன் சில தொழிலாளர்கள் கூறுகின்றனர்.

அதே நிலைமை உத்துசானின் கீழ் இயங்கும் இணைய செய்தித்தாளான கொஸ்மொவுக்கும் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

உத்துசான் கிளைக்கான தேசிய ஊடகவியலாளர்கள் சங்கம் (என்யுஜெ) தலைவர் முகமட் தௌபிக் அப்துல் ரசாக் கூறுகையில்,  இன்று திங்கட்கிழமை தனது பல ஊழியர்களுக்கு வாய்வழியாக இந்த முடிவு சொல்லப்பட்டதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

உத்துசான் தொழிலாளர்கள் குழு இன்று தங்களுக்கு மூன்று மாதங்களாக வழங்கப்படாத சம்பளத்தைக் கோரினர்.