கோலாலம்பூர்: உத்துசான் மலாயு பெர்ஹாட் இந்த மாத இறுதிக்குள் 815 ஊழியர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதச் சம்பளத்தைத் தீர்க்க வேண்டும் என்று மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி வரை பணியாற்றிய ஊழியர்களுக்கு இந்த சம்பளப் பணம் செலுத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2018-இல் தன்னார்வ பிரிப்பு திட்டம் (விஎஸ்எஸ்) மூலம் பணியிலிருந்து நீக்கப்பட்ட ஊழியர்களுக்கும், உத்துசான் மலேசியா மற்றும் கோஸ்மோ! நிறுவனம் முழு கட்டணத்தை செலுத்தவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
“மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி உத்துசான் மலாயு கடந்த மே 2018-ஆம் ஆண்டு முதல் பணப்புழக்கத்தில் சரிவினை எதிர்கொண்டுள்ளதைக் காட்டியது என்றும், அனைத்து நிறுவனத்தின் நடவடிக்கைகளையும் 2019-ஆம் ஆண்டு அக்டோபர் 9-ஆம் தேதி முதல் நிறுத்த அமலுக்கு கொண்டுவரப்படும் என்றும் ஒரு குறிப்பாணையை வெளியிட்டிருந்தது” என்று அது குறிப்பிட்டது.