Home One Line P1 உத்துசான் மலேசியா மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

உத்துசான் மலேசியா மீண்டும் ஆரம்பிக்கப்படும்!

835
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஆண்டு மூடப்பட்ட பழமையான மலாய் நாளேடான உத்துசான் மலேசியா வரும் மாதங்களில் மீண்டும் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உத்துசான் அன்லைன் தமது முகநூல் பக்கத்தில், மீடியா முலியா செண்டெரியான் பெர்ஹாட் பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர்,  ஆசிரியர், நிருபர், படைப்பு எழுத்தாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் போன்ற பணிகளுக்கு ஆட்களைத் தேடுவதாகத் தெரிவித்திருந்தது.

மீடியா முலியா நிறுவனம்,  சைட் மொக்தார் அல் புகாரியுடன் தொடர்புடையது என்று கூறப்படுகிறது.

#TamilSchoolmychoice

எயூஜெஉத்துசான் கிளைச் செயலாளர் முகமட் பாசிர் அபுபக்கரை தொடர்பு கொண்டபோது, ​​உத்துசான் மலேசியா மே மாத தொடக்கத்தில் நடவடிக்கைகளைத் தொடங்கக்கூடும் என்பதை உறுதிப்படுத்தியதாகவும், ஆனால், முன்னாள் ஊழியர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கும் முடிவுகள் இல்லை என்று தெரிவித்ததாகவும் மலேசியாகினி பதிவிட்டுள்ளது.

காலியிடங்கள் அனைவருக்கும் திறக்கப்பட்டிருக்கும் மற்றும் முன்னாள் ஊழியர்களும் விண்ணப்பிக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள், ஆனால் அவர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற வாக்குறுதியும் இல்லை.”

எனக்குத் தெரிந்தவரை, அவர்கள் மற்றவர்களைப் போலவே அந்த நேர்காணல் செயல்முறையில் பங்குக் கொள்ள வேண்டும்,” என்று பாசிர் கூறினார்

பாங்சாரில் உள்ள நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரேஸ் (என்எஸ்டிபி) தலைமையகத்தில் இருக்கும் புதிய அலுவலகத்தில் பல முன்னாள் ஊழியர்கள் உத்துசான் மலேசியாவுடன் பணிபுரிய விண்ணப்பித்துள்ளதாக பாசிர் கூறினார்.

எவ்வாறாயினும், தலைமையகம், 40 பத்திரிகையாளர்கள், 12 புகைப்படக் கலைஞர்கள் மற்றும் 12 வரைபட விளக்க கலைஞர்களை மட்டுமே நியமிக்கும் என்று கூறப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.